ராஜபாளையம் ஜூன் 9
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ஏசுதாசன் உத்தரவின் பேரில் சார்புஆய்வாளர் கமலக்கண்ணன் போலீஸ் பார்ட்டிசகிதம் கஞ்சாவிற்பனையைதடுக்கும் பொருட்டு இராஜபாளையம் நகர் நான்கு முக்குவிலக்குஅருகில் ரோந்துசுற்றிகண்காணித்துவந்தபோது தென்றல் நகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று
கொண்டிருந்த நபரை சோதனை செய்தபோது அவர் பேண்ட் பையில் வைத்திருந்த ஒரு சிறிய பாலிதின் கவரில் கஞ்சா இருந்துள்ளது
மேலும் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் சக்திநகர் பாலசுப்ரமணியன் மகன் சீனிவாசன் (25) என்பதும் 100கிராம் கஞ்சா வைத்திருந்ததும் மேலும் அவரை விசாரித்தபோது அவர் வத்றாயிருப்பு தாலுகா,கோட்டையூரிலுள்ள சன் சீனிராஜ் மகன்களான பாண்டியராஜ்,(31) மற்றும் பாலகிருஷ்ணன்(28) என்பவர்களிடம் வாங்கியதாக கூறியதின் பேரில் சீனிவாசனை அழைத்துகாகொண்டு கோட்டையூர், தெற்குதெருவில் நின்றுகொண்டிருந்த பாண்டியராஜ் மற்றும் பாலகிருஷணன் இருவரையும் பிடித்து அவர்களின் வீட்டு முன்பு உள்ள மாட்டுக்கொட்டகையில் மறைத்துவைத்திருந்த வெள்ளை நிறபாலீதீன் பையை எடுத்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்துள்ளது இதனை தொடர்ந்து அவர்களை நிலையம் அழைத்துவந்து வழக்கு பதிவு செய்து மொத்தம் 1500கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்