கோவையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவில்,அருள் மிகு ஆதிகோனியம்மன் திருக்கோவில்,அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில்கள் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
கோவை சங்கனூர் பகுதியில் அமைந்துள்ள ஒரே வளாகத்தில் அமைய பெற்றுள்ள அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவில்,அருள் மிகு ஆதிகோனியம்மன் திருக்கோவில்,அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில்கள் கும்பாபிஷேக விழா கடந்த 6 ந்தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கப்பட்டது.
தொடர்ந்து மங்கல இசையுடன் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது..விழாவின் முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டு பெருவிழா பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்,இராமனந்த குமரகுருபர சுவாமிகள்,முத்து சிவராமசாமி அடிகளார் ஆகியோர் அருளாசியுடன் நடைபெற்றது.
கும்பாபிஷேக யாக பூஜைகள் சிவஸ்ரீ குருமூர்த்தி சிவாச்சாரியார்,செல்வ சங்கர சிவாச்சாரியார், கணேச சிவாச்சாரியார் ஆகியோர் செய்தனர்..
அதிகாலை மங்கள இசை,கணபதி பூஜை,நான்காம் கால யாக பூஜை,மற்றும் பரிவார யாக சாலை பூஜையுடன் ஹோமம், பூர்ணாகுதி,தீபாரதனை நடைபெற்றது..
பின்னர் யாகசாலையில் வைத்து பல்வேறு புனித தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் பூஜை செய்தனர்.
பின், மேளதாளங்கள் முழங்க புனித நீரை தலையில் சுமந்து கோயிலை சுற்றி ஊர்வலமாக கோயில் ராஜகோபுர கலசத்திற்கு எடுத்துச் சென்று கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் தீபாரதணை காண்பிக்க ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்த அப்பகுதியில் அன்னதான விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்..விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.