பொங்கல் பரிசு தொகை. பொங்கல் பொருட்களை மேயர் ஜெகன் வழங்கினார்.
தமிழக அரசு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஸ்மார்ட் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாய் மற்றும் வேஷ்டி சேலை. அதுபோல பச்சரிசி. சீனி. கரும்பு உள்ளிட்ட பொருட்களை ஒவ்வொரு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த உடன் தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு 3000 மற்றும் பொங்கல் பொருட்களை மாநகராட்சி மேயர் ஜெகன் பொதுமக்களுக்கு வழங்கினார்.
அப்போது மேயர் ஜெகன் பொதுமக்களிடம் தமிழகத்தில் ஆட்சி செய்யும் திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் ஸ்டாலின நீங்கள் எப்போதும் துணையாக இருக்க வேண்டும். நான்கு வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாநகர் எப்படி இருந்தது தற்போது எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும் ஒரு காலத்தில் குடிநீர் எப்போது வரும் என்று காத்திருந்த காலம் உண்டு ஆனால் தற்போது தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது வரும் சில மாதத்தில் மாநகர் பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அதுபோல சாலை வசதி. கழிவுநீர் கான் வசதி உள்ளிட்ட வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது ஆகையால் வரும் 2026 ஆம் ஆண்டு நீங்கள் எல்லோரும் தமிழக அரசுக்கு தமிழக முதலமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பொதுமக்களிடம் கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன். போல்பேட்டை திமுக நிர்வாகிகள் பிரபாகர். ஜேஸ் பார். உள்ளிட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்