பெரம்பலூர்.ஜன.08. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து, அரசு பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2 நாள் திருச்சி முகாம்
செல்ல உள்ள 50 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் செல்லும் போருந்துக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்கள்.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, பள்ளிக் கல்வித் துறை, பெரம்பலூர் இணைந்து, அரசு பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2 நாள் இயற்கை முகாம் திருச்சி 8 மற்றும் 9 ஜனவரி ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
இதில் 10 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 50 மாணவர்களுடன் 10 பொறுப்பாசிரியர்கள் கலந்து கொண்டு, திருச்சிராப்பள்ளியில் உள்ள பறவைகள் பூங்கா, முக்கொம்பு வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் கல்லணை ஆகிய இடங்களை பார்வையிட உள்ளார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் உள்ளனர்.