தேனியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு மற்றும் ரூபாய் 3000 ரொக்கத்தொகையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்கள்
இந்த நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேசும் போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு பல்வேறு முத்தான திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் கரும்பு கொள்முதலுக்கு ரூபாய் 1.63. கோடியும் தகுதியான 430825 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 3000 வீதம் வழங்குவதற்கு ஏதுவாக ரூபாய் நக129.24. சகோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 3000 ரொக்கத்தொகையும் பெற்று . மகிழ்ச்சியாக பொங்கலை தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு தேனி எம்பி பேசினார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர்கள் தேனி ரேணு பிரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் சின்னமனூர் அய்யம்மாள் ராமு கம்பம் வனிதா நெப்போலியன் கூடலூர் பத்மாவதி லோகந்துரை பேரூராட்சி மன்ற தலைவர்கள் பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி தேவாரம் லட்சுமி பால் பாண்டி கோம்பை முல்லை மோகன் ராஜா ஒடைப்பட்டி வழக்கறிஞர் தனுஷ்கோடி அனுமந்தன் பட்டி ராஜேந்திரன் கம்பம் புதுப்பட்டி சுந்தரி பாஸ்கரன் பண்ணைப் புரம் லட்சுமி இளங்கோ மார்க்கையன்கோட்டை ஒ.ஏ.முருகன்.குச்சனூர் பி.டி.ரவிச்சந்திரன்
வீரபாண்டி கீதா சசி பழனிசெட்டிபட்டி வி.பி.ஏ.மிதுன் சக்கரவர்த்தி தென்கரை வி.நாகராஜ் தாமரைக்குளம் ச. பால்பாண்டி வடுகபட்டி சி .நடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்