அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தஞ்சாவூர் மாநகரக் கழக செயலாளர் என் எஸ் சரவணன் அவர்களை மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமனம் செய்துள்ளதை அடுத்து, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர்,அதிமுக தஞ்சாவூர் மேற்கு மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ஏகேஆர்.ரவிச்சந்தர் அவர்கள் என். எஸ். சரவணன் அவர்களை நேரில் சந்தித்து சந்தன மாலை அணிவித்து அவர் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். வருகிற சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கழக வெற்றிக்கு அயராது உழைப்போம் என உறுதி ஏற்றார்.