தேனி மாவட்டம் கம்பத்தில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் என் இராமகிருஷ்ணன் அவர்களை தென்னிந்திய வாணியர் சங்க மாநிலத் துணைத் தலைவரும் வாணியர் சங்க தேனி மாவட்ட தலைவருமான ஆர் சுந்தரவடிவேல் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்

மனு விபரம் தமிழக எல்லையான குமுளியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்திற்கு கண்ணகி பெயர் சூட்ட வேண்டும் சிதில மடைந்து உள்ள கண்ணகி கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் வருடம் தோறும் நடைபெறும் சித்திரை முழு நிலவு நாளில் மூன்று நாள் கோவில் திறந்து பக்தர்கள் அனுமதித்து தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்ணகி கோவிலில் கண்ணகி கோட்டம் அமைக்க வேண்டும் தமிழகத்தில் மாபெரும் சக்தியான வாணியர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளதை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ இது குறித்து சட்டமன்றத்தில் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.உடன் கம்பம் வடக்கு வட்ட வாணியர் சங்கத் தலைவர் ஜெயபாலன் செயலாளர் முத்துப்பாண்டி பொருளாளர் குணசேகரன் வாணியர் சங்க மாவட்ட செயலாளர் கனகராஜ் அறங்காவலர் முருகேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *