அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளிக்கு இடம் வாங்குவதற்கான ஆலோசனை கூட்டம்:-
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அய்யாபுரத்தில் நடைபெற்ற மனுநீதி நாளில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஊர் நிர்வாகி குருசாமி நாடார் அய்யாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக கொடுத்துள்ளார்
தொடக்கக் கல்வி அலுவலகத்திலிருந்து தகவல் கேட்டு அறிந்ததன் அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சந்திரன் தலைமையில் ஊர் நிர்வாகிகள் குருசாமி முப்புடாதி வேலு பொன்னுச்சாமி சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக்கு இடம் வாங்குவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார், பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள் அப்போது அவர் பேசும்போது இந்தப் பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது 16/11/1939 ஆம் ஆண்டு இந்த பள்ளி தொடங்கப்பட்டு உள்ளது
சுமார் 85 ஆண்டுகளாக துவக்கப்பள்ளியாகவே இருந்து வருகிறது இந்தப் பள்ளியை தரம் உயர்த்துவதற்கு தேவையான இட வசதிகளை ஊரின் சார்பாக அரசுக்கு செய்து கொடுப்போம் என்றும் விரைவில் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களையும்
கல்வி துறை அதிகாரிகளையும் ஊரின் சார்பாக சந்தித்து கலந்து பேசி நல்லதொரு முடிவை மேற்கொள்வோம் என்று பேசினார்கள்
மேலும் இந்த கூட்டத்தில் பள்ளி தரம் உயர்த்துவதற்கு தேவையான இட வசதிகளை ஊரின் சார்பாக தமிழக அரசுக்கு கொடுப்பதாகவும் தமிழக அரசு அய்யாபுரத்தில் உள்ள தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு தேவையான இட வசதிகளை அரசுக்கு எழுதிக் கொடுப்பதாகவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இந்த ஆலோசனை கூட்டத்தில் நவமணி திரவியம் கணபதி கந்தசாமி விஜயராமன் பாலசுப்பிரமணியன் ஐயப்பன் குழந்தைஏசு சுப்பையா மற்றும் முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டார்கள்