ஓசை நயமும், பா வகையும் கொண்ட ஒரே மொழி தமிழ் மட்டுமே என தென் சென் னைத் தொகுதி மக்களவை உறுப் பினர் தமிழச்சி தங்கப்பாண்டி யன் தெரிவித்தார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத் தில் நடை பெற்ற சான்றோர் பெரு விழா வின் நிறைவு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:
பாண்டிய மன்னன் முடத் திருமாறன் உள்ளிட்ட புலவர்க ளால் வளர்க்கப்பட்ட சீரிளமை மொழி தமிழ். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ்ச் சான்றோர்கள் பாராட்டப்படுவது சிறப்புக் குரியது. தமிழுக்கான சிறப்பு எந்த மொழிக்கும் கிடையாது. ஓசை நயமும், பா வகையும் கொண்ட ஒரே மொழி தமிழ். தமிழ் அன்பின் மொழி; இரக்கத்தின் மொழி என்று தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறினார்.
இதையடுத்து, நான்காம் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் நாகேந் திர சேதுபதி, இலக்குமி குமரன் ஆகியோருக்குதமிழச்சி தங்கபாண்டியன் விருது வழங்கினார்.
விழாவுக்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார்.
தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், மதுரை யாதவர் கல்லூரி மாணவ, மாணவிகள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ‘தமிழ்ச் சங்கங்களின் சவால்களும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அமெரிக்காவின் பாரதி கலை மன்றத் தலைவர் கணேஷ் ரகு, ஹாங்காங் தமிழ் பண்பாட்டு இயக்க முன்னாள் தலைவர் மெய்.சித்ரா, கரூர் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கத் தலைவர் சுப்பிரமணியன், கர்நாடக அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் துரைசாமி, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்துராமன், மதுரை புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் நிறைவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.