தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் சைனா சிகரெட் லைட்டரை தமிழக முழுவதும் தடை செய்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்திக்க அனைத்து உற்பத்தியாளர் சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று கோரிக்கை மனு கொடுத்து வேண்டிக் கொள்வதற்கு ஆவணை செய்யவும் அதன்பிறகு ஒன்றிய தொழில் துறை அமைச்சர் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்து இந்தியாவில் பிளாக் சிகரெட் லைட்டரை விற்பனை செய்வதற்கு தடை விதிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து தர வேண்டினார்கள்.
மேலும், மெழுகு தீப்பெட்டி தொழிலுக்கு cpcl மூலமாகப்படும் மெழுகு wax பெரிய தயாரிப்பாளர்களுக்கு நேரடியாகவும் சிறிய உற்பத்தியாளர்களுக்கு சிட்கோ மூலமாகவும் வழங்கப்பட்டு வந்தன சில மாதங்களாக சிக்கோ மூலமாக வழங்கப்பட்டு வந்த மெழுகை நிறுத்தி விட்டது எனவே சிபிசிஎல் மூலமாக குறைந்தபட்சம் 7 டன் என்று இருப்பதை குறைந்பட்சம் 3 டன் வரையும் வழங்குவதற்கு ஆவணை செய்ய கேட்டுக்கொண்டனர்.
நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் மா. பரமசிவம் துணைத்தலைவர் கோபால்சாமி செயலாளர் வி எஸ் சேதுரத்தினம் சாத்தூர் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் லட்சுமணன் உறுப்பினர் குருசாமி ஆல் இந்தியா மேட்ச் சேம்பர் சிவகாசி தலைவர் விஜய் ஆனந்த் செயலாளர் பிலால் மேச் நூர் முகமது பொருளாலர் நாகராஜன் மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் டேவிட் செயலாளர் தேன்மொழி ராஜன் பவுல்ராஜ் கிருபாகரன் மற்றும் உறுப்பினர்கள் ராஜேந்திர குமார்பகட்டி மகேஷ் மிட்டல் ஜோசப் ரத்தினம் முத்து சின்ன கொம்பையா பெருமாள்பட்டிமாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.