திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் தை பொங்கல் திருநாளை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வலங்கைமானில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன் தலைமையில், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி, பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன் ஆகியோர் முன்னிலையில் அரிசி அட்டைத்தாரர்களுக்கு வேஷ்டி,சேலை, ஒரு கிலோ பச்சை அரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கம் ரூபாய் 3000 வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், பேரூர் திமுக பொருளாளர் எல்.புருசோத்தமன், கிழக்கு ஒன்றிய பொருளாளர் நல்லம்பூர் கிருஷ்ணமூர்த்தி,பேரூர் துணை செயலாளர்கள் வி.சி.இராஜேந்திரன், வசந்தி பாஸ்கர், லாயம் வி.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி எஸ்.ரவிச்சந்திரன், ஒன்றிய பிரதிநிதி சிங்குதெரு எஸ்.ஆர்.ராஜேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் லாயம் செல்வமணி,க.செல்வம், ரம்ஜான் பீவி சிவராஜ், வீரமணி, ஆனந்த், சுமதி தர்மராஜன் மற்றும் வார்டு செயலாளர்கள், இளைஞர் அணியினர்,6- வார்டு திமுக பொருளாளர் சண்முகசுந்தரம் யாதவ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் வலங்கைமான் ஒன்றியம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றன.