ஆதரவற்ற முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

திருச்சி மணிகண்டம் பேருந்து நிலையம் அருகே பெயர் விலாசம் தெரியாத முதியவர் மயக்க நிலையில் இருந்தார்.பொதுமக்கள் உயிர்காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள்.

உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மேற்படி நபர் குறித்து மணிகண்டம் காவல்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரிக்கையில் உற்றார் உறவினர் இல்லாதவர் என்றும் தெரியவந்தது. இறந்த முதியவர் உடற்கூராய்வு செய்யப்பட்டது.

உடற்கூராய்வு செய்யப்பட்ட உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் நல்லடக்கம் செய்வதற்காக ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு மணிகண்டம் காவல் நிலைய காவலர் செபஸ்தியான் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி குழுமி கரை மயானத்தில் மணிகண்டம் காவல் நிலைய காவலர் செபஸ்தியான் முன்னிலையில் பெயர் விலாசம் தெரியாத ஆதரவற்ற உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *