பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் நவ-02
அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 201 பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றதன் தொடர்ச்சியாக ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், விளந்தை ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கசொக கண்ணன் அவர்கள் கலந்துகொண்டnர்.
இதில் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கச்சிபெருமாள் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் (கி.ஊ) அவர்கள் தலைமை யிலும், வாணதிரயன்பட்டினம் ஊராட்சியில் தனி அலுவலரால் நியமிக்கப்பட்ட வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமையிலும், பெரியவளையம் ஊராட்சியில் தனி அலுவலர் ஜெயந்தி தலைமையிலும், தண்டலை ஊராட்சியில் தன உதவியாளர் சுபா தலைமையிலும், துளாரங்குறிச்சி ஊராட்சியில்கிராம நல அலுவலர் சந்திரவடிவு தலைமையிலும், இடையார் ஊராட்சியில் மாலா தலைமையிலும், அங்கராயநல்லூர் ஊராட்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி தலைமையிலும், கழுவந்தோண்டி ஊராட்சியில் மேற்பார்வையாளர் மாலதி தலைமையிலும், கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மேலும் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட வாழைக்குறிச்சி ஊராட்சியில வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் (வ.ஊ) அவர்கள் தலைமை யிலும், நாயகனைப்பிரியாள் ஊராட்சியில் பற்றாளர் ஜவஹர்லால் தலைமையிலும், அனைக்குடம் ஊராட்சியில் இளநிலை உதவியாளர் பவானி தலைமையிலும்,
பொற்பதிந்தநல்லூர் ஊராட்சியில் இளநிலை உதவியாளர் மணிகண்டன் தலைமையிலும் மற்றும் ஆண்டிமடம் ஒன்றியம் கூவத்தூர் ஊராட்சியில் தனி அலுவல ரால் நியமிக்கப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாதேவி தலைமையிலும், ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள ஊராட்சி செயலாளர்கள் முன்னிலையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆங்காங்கே கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்தும் விவாதிக்கப்
பட்டது.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் முனைவர் சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் தேன்ராஜ், உடையார் பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, ஆண்டிமடம் வட்டாட்சியர் ராஜமூர்த்தி, ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்சாமி (வ.ஊ), அன்புச்செல்வன் (கி.ஊ), ஊராட்சி செயலாளர்கள் பாலமுருகன் (விளந்தை), ஆர் இராதாகிருஷ்ணன் (தண்டலை), பன்னீர்செல்வம் (வாணதிரயன்பட்டினம்), ஆ. அழகேசன் (பெரியவளையம்), செல்வராஜ் (நாயகனைப்பிரியாள்), பாலகுரு (துளாரங்குறிச்சி), அய்யப்பன் (இடையார்), ராவணன் (அங்கராய நல்லூர்), கொளஞ்சிநாதன் (கச்சி பெருமாள்), செந்தில் (அனைக்குடம்), அசோக்குமார் (பொற்பதிந்தநல்லூர்), இராதாக்கிருஷ்ணன் (கழுவந் தோண்டி), ராஜா (கூவத்தூர்),மற்றும் அனைத்து நிலை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.