கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் கணினியியல் மற்றும் அது சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கான “பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள நூற்றாண்டுக் கலையரங்கில் நடைபெற்றது.

பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரியின் பொறுப்பு முதல்வர் டாக்டர் தைலா,கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்..

விழாவில் சிறப்பு விருந்தினராக பெங்களூரு, இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் டாக்டர் கோவிந்தன் ரங்கராஜன் கலந்துகொண்டு,பொறியியல் பட்ட படிப்புகளை நிறைவு செய்த பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கினார் முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர்,செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொழில் நுட்பங்களில் முழு கவனம் செலுத்துவதோடு தங்களது தனித்திறமைகளை இளம் தலைமுறையினர் வளர்த்தி கொள்வது அவசியம் என வலியுறுத்தினார்..

குறிப்பாக தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதில் தேவை இருப்பினும்,கலாச்சார தொடர்புகள்,, மனித உணர்வுகள்,போன்றவற்றை ஒரு போதும் இழக்காமல் இருப்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார் கால நிலை மாற்றங்கள்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற சவாலான உலகில் தற்போதையை இளம் மாணவர்கள் இருப்பதாக கூறிய அவர்,எதிர் கால தலைமுறைக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதில் பொறுப்புகள் இருப்பதாக அவர் சுட்டி காட்டினார்..

விழாவில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், பயோ சயின்ஸ், மற்றும் பயோ டெக்னாலஜி, உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 543 இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது..

நிகழ்ச்சியில் கல்லூரியின் பல்வேறு துறை தலைவர்கள்,பேராசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *