திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் தை பொங்கல் திருநாளை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் விருப்பாச்சிபுரம் திமுக கிளை செயலாளரும், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளருமான ராயல் கோ.திருநாவுக்கரசு தலைமையில், விருப்பாச்சிபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சின்னகரம் சாமிநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஏ.சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் அரிசி அட்டைத்தாரர்களுக்கு வேஷ்டி, சேலை, ஒரு கிலோ பச்சை அரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கம் ரூபாய் 3000 வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் விருப்பாச்சிபுரம் ஊராட்சி திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *