ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் நியாய விலை கடையில், அரசின் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் கலந்து கொண்டு, 3 ஆயிரம் ரூபாய் பணம், கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

அப்போது, பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிச்சாமி, அந்தியூர் வட்ட வழங்கல் அலுவலர் பூங்கோதை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.அந்தியூர் வட்டாரத்தில் உள்ள 125 ரேஷன் கடைகளில், தகுதியுள்ள 77 ஆயிரம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *