செங்குன்றம் செய்தியாளர்
அகில உலக குடிபோதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ரெட்டேரி குமரன் மருத்துவமனை, ரிடம்ப்ட்டி யூ ரெக்கவரி கேர் சார்பில் 7.5 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
இதில் வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி , ஜிஜிகேந்திரன் ராஜன் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியமாகத்தின் தலைமை கண்காணிப்பாளர் ஜி .ஜிகேந்திரன் ராஜன், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர்.அருணன் காமராஜர் அறக்கட்டளை நிறுவனர் தங்கமுத்து, ரெட்டேரி குமரன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஆறுமுகசாமி ஆகியோரது முன்னிலையில்
இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது .
இதில் ஆறு வயது முதல் 40 வயது வரையிலான சிறுவர்கள், மாணவ மாணவிகள் ஆண்கள் ,பெண்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரெட்டேரி மாதவரம் ரவுண்டானா கதிர்வேடு விநாயகபுரம் ஆகிய இடங்கள் வழியாக ஓடிவந்தனர்.
இதில் முதலாவதாக வந்த சிறுவர் பெரியவர்களுக்கு நினைவு பரிசுகள் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மற்றும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களை டாக்டர் கலாநிதி வீராசாமி வழங்கினார்.
டாக்டர் கலாநிதி வீராசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது போதை பழக்க வழக்கங்களை ஒழிக்க அனைவரும் இது போன்ற பழக்கங்களினால் சீரழியும் குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை கூற வேண்டும் . மேலும் பள்ளியில் பயிலும் சிறுவர் சிறுமியர் களையும் மாணவ மாணவிகளையும் பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க வேண்டும் எனவும் பழக்கத்தை ஒழிக்க அரசு மற்றும் நடவடிக்கை எடுத்தால் மற்றும் போதாது நாமும் உறுதுணையாக இருந்து அதனை முற்றிலுமாக ஒழிக்க பாடுபட வேண்டும் என கூறினார். இதில் மாதவரம் புழல் சரக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.