தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுகவினர் தமிழ்நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தியதால் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்திற்க்கு தமிழக அரசு பொறுப்பேற்று சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னால் அமைச்சரும், மாவட்டச் செயலாளரும் அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி கையில் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், மாநில விவசாய அணி செயலாளர் அன்பழகன், நகர செயலாளர் பூக்கடை ரவி, முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.