திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 30- கொக்காலடி வருவாய் கிராமத்தில் வசிக்கும் கருப்பையா மகன் மாரிமுத்து என்பவர் தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தை வெட்டி வீழ்த்தியுள்ளார்..

தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்ட பிறகு உடனடியாக அந்த நபர் மீது காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் மாநில மரமான பனை மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருவது குறித்து ஊடகங்களில் செய்தி வந்த பிறகு தான் நடவடிக்கை மேற்கொள்வார்கள். ஆனால் இந்த சம்பவத்தை அறிந்தவுடன் உடனடியாக வருவாய் துறை அதிகாரிகள் களத்தில் சென்று வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்பதை அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வ வலர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் நன்றி தெரிவித்து, வரவேற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *