கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் சக்தி லயன்ஸ் சங்கம் சார்பாக கரூர் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள காருண்ய மாதா முதியோர் இல்லத்திற்கு தானியங்கி சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கரூர் சக்தி லயன் சங்கத்தின் தலைவர் லயன் திலகவதி தலைமை தாங்கினார்.புரவலர் மற்றும் சிநேகம் ஆண்டின் மாவட்ட ஆளுநர் PMJF சேது குமார் கலந்து கொண்டு தொண்டே தெய்வீகம் குறித்து வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் செயலாளர் லயன் வனிதா,பொருளாளர் லயன்ஸ் சாந்தி, முன்னாள் சங்கத் தலைவர்கள் லயன் லட்சுமி மணி, லயன் கவிதா கார்த்தீசன், உறுப்பினர்கள் லயன் நிர்மலா பாலு, லயன் ஆனந்தி மற்றும் அருட் சகோதரிகள் எலிசபெத்,ஜெசி, அந்தோனியா ஆகியோரும் கலந்து கொண்டனர். உலக அமைதிக்காகவும் சமத்துவ சகோதரர்கள் பேணவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்வில் காருண்ய மாதா முதியோர் இல்லத்தில் இருக்கும் அனைவரும் கலைந்து கொண்டனர்.