வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் திண்டுக்கல் யூனியன் அலுவலகம் அருகே கோரிக்கை ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு முறையான சிறப்பு பென்ஷன் அகவிலைப்படியுடன் ரூ.6750ஐ வழங்கவும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி 2.57 காரணிபடி ஓய்வூதியம் அமல்படுத்தவும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தேசிய மருத்துவ காப்பீடு வழங்கிடவும், ஈமச்சடங்கு நிதி ரூபாய் 25 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மாயவலை சிறப்புரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். முன்னாள் வேடசந்தூர் வட்டார தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் பூமி பாலகிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் குமரம்மாள் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *