கோவை திருச்சி சாலை,மற்றும் அவினாசி சாலை, பொள்ளாச்சி, ஊட்டி, திருப்பூர், அவினாசி, ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளுக்கு முழுமையான சேவையினை வழங்கி வரும் பிரசன்னா கியா நிறுவனம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோமொபைல் துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்துள்ளது.
இந்நிலையில் கோவை திருச்சி சாலையில் உள்ள கியா பிரசன்னா ஷோரூமில் ‘ஆல் நியூ’ கியா செல்டோஸ் கார் அறிமுக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
கியா பிரசன்னா வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் புதிய பிரீமியம் ஆல் நியூ செல்டோஸ் காரை அனைவரும் இணைந்து அறிமுகம் செய்தனர்..
புதிய கியா ஆல் நியூ செல்டோஸ் குறித்து கியா பிரசன்னா கோயமுத்தூர் பொது மேலாளர் பீட்டர் ஜோசப் வின்ட்ஸர் செய்தியாளர்களிடம் பேசினார்..
அப்போது பேசிய அவர், முன்னணி பாதுகாப்பு அம்சங்களுடன், பிரீமியம் SUV கார்கள் பிரிவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி உள்ள, ஆல்-நியூ கியா செல்டோஸ். சிறப்பான டிரைவிங் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வகைகளும் இதில் இருப்பதாகவும், புதிய கியா செல்டோஸ் மேம்பட்ட ADAS தொழில்நுட்பம், பிரீமியம் உட்புற வடிவமைப்பு மற்றும் சிறந்த ஓட்டுநர் அனுபவம் ஆகியவற்றுடன், விலை வரம்பில் சிறந்த மதிப்புள்ள SUV-யாக தனித்து நிற்பதாக அவர் தெரிவித்தார்..
கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து பிரசன்னா கியா ஷோரூம்களிலும் டெஸ்ட் டிரைவ் மற்றும் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் இப்போது ஆல் -நியூ கியா செல்டோஸ் காரினை நேரடியாக ஓட்டிப்பார்த்து வாங்கி செல்லலாம் என அவர் தெரிவித்தார்..
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, “நுகர்வோரால் அதிகம் நம்பப்படும் ரீடெய்ல் வணிக நிறுவனம்” என்ற விருதையும் கியா பிரசன்னா பெற்றுள்ளது குறிப்பிடதக்கது..