எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பூம்புகார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 386 மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் வழங்கினார்.

தமிழக உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடக்கி வைத்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான பூம்புகார் கலை கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இக்கல்லூரியில் பயிலும் 386 மாணவ- மாணவிகளுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், கல்லூரி முதல்வர் சீர்காழி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் வின்சென்ட் ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *