கடலூர் கிழக்கு மாவட்ட கழக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி மாவட்ட,மாநகர,ஒன்றிய,நகர,பகுதி,பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்,
குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர்தனியார் திருமண மண்டபத்தில், நடைப்பெற்றது. தமிழக வேளாண்மை ,உழவர் நலத்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, ஐயப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா,முன்னாள் எம் எல் ஏ சரவணன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சுதா சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அமுதராணி வரவேற்புரையாற்றினார்.
கழக மகளிரணி செயலாளர் ஹெலன்டேவிட்சன்,மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் பரணி,மகளிர் தொண்டரணி இணை செயலாளர்கள் குமரி விஜயகுமார்,தமிழரசி ரவிக்குமார், டெல்டா மண்டல மகளிரணி பொறுப்பாளர் ரேகா பிரியதர்ஷினி, மகளிரணி துணைசெயலாளர் அங்கையர்கன்னி, மகளிர் சமூகவலைதள பொறுப்பாளர் ரத்னா லோகேஸ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டனர்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது;
வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா, மண்டல,மாநாட்டில் மாநாட்டில், நம்முடைய மாவட்டத்திலிருந்து 15 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ள வேண்டும். மாநாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் என்னென்ன செய்ய வேண்டும், எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என அறிவுரை கொடுப்பார்கள்.2008 ல் மகளிர் மாநாடு கடலூரில் ஊர்வலத்துடன் கூடிய மாபெரும் மகளிர் மாநாடு நடைப்பெற்றது. மைதானம் முழுவதும் பந்தல் அமைத்து மாபெரும் எழுச்சியுடன் அந்த மாநாட்டை நடத்தினோம்.
தற்போது மகளிருக்கு உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், தவப்புதல்வி திட்டம், விலையில்லா மகளிர் பேருந்து விடியல் பயணம் இப்படி மகளிருக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குடும்பத்தில் மூன்று நபர்களாவது கழக அரசின் பணப்பயன்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். மகளிர் அணி அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த திட்டங்களை மக்களிடையே எடுத்துக்கூறி வாக்குகளாக மாற்ற வேண்டும். வருகின்ற 2030-க்குள் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து உங்கள் கனவை கூறுங்கள் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்கள்.

உங்களுக்கு என்ன கனவு என்ற கேட்பார்கள் அதை இந்த 2030-க்குள் நாங்கள் நிறைவேற்றுவோம் என்று முதல்வராக உத்திரவாதம் கொடுத்திருக்கின்றார்.உங்களுடைய கனவு என்ன, உங்களுக்கு என்ன வேண்டும் உங்கள் தெருவுக்கு என்ன வேண்டும் உங்கள் பகுதிக்கு என்ன வேண்டும், என்று உங்களுடைய கனவை நீங்கள் கேட்கவேண்டும் கனவை குறிப்பிட்டு கொடுக்க வேண்டும். அதனை அறிக்கையாக தயாரித்து அது உங்களுக்கு ஐந்தாண்டு காலத்திலே நிறைவேற்றப்படும்.

எப்படி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தாக கொடுப்போம்,விடியல் பேருந்து பயண் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார், அதனை நிறைவேற்றியும் தந்துள்ளார். இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்வில் மாவட்ட மகளிரணி துணை தலைவர் அமுதாராணி, துணை அமைப்பாளர்கள் வெ மலர்விழி,சங்கீதா,இரா.கெளரி,ஆ.ஜீவா,சோ.லதா,கல்பனா, மாவட்ட மகளிர் தொண்டரணி துணை தலைவர் பு.ஜெயசுதா,

மாவட்ட கழக துணை செயலாளர் சக்திவேல், ஒன்றிய கழக செயலாளர்கள்: அ.முத்துசாமி,வி.சிவக்குமார்,த.ஜெயபாண்டியன், ஆர்.நாராயணசாமி, தங்க.ஆனந்தன்,கே.ஆர்.ராயர்,கே.ஆர்.கோவிந்தராஜ்,எஸ்.செந்தில்குமார்,தெ.காசிராஜன்,பி.சுப்பிரமணியன்,  கே.ஆர்.தனஞ்செயன், ஆர்.விஜயசுந்தரம், கே.மகேஷ் , ஏ.எஸ்.மதியழகன்,ஏ.எம்.மதியழகன்,மு.வெற்றிவேல்,  வி.ஜி.பி.சபாநாயகம், டி.திருமூர்த்தி, வி.பி.பாலு,பா.திருமாவளவன்,பி.சுந்தரபாண்டியன், முத்துபெருமாள்,ஆர்.கலையரசன்,  எம்.மனோகரன், த.சங்கர், ஆர்.ராஜேந்திரன், கே.நடராஜன்,ம.சோழன், வி.கோவிந்தசாமி,கடலூர்  மாநகர செயலாளர்: கே.எஸ்.ராஜா,  கடலூர் பகுதி செயலாளர்கள்: ப.நடராஜன், பா.வெங்கடேஷ்,
நகர கழக செயலாளர் த.தமிழ்ச்செல்வன், வடலூர் நகரமன்றத் தலைவர் சு.சிவக்குமார்,
செயற்குழு உறுப்பினர்கள்: வ.ஞானசேகரன், வே.விக்கிரமன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.ஆர்.பாலமுருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மனோரஞ்சிதம் நன்றியுரையாற்றினார்.

“செய்தி ஜீவா செந்தில் “

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *