காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
சிவன்மலை முருகன் கோயிலில் படி பூஜை
காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி மலைக் கோயிலில் மார்கழி மாத படி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் படிபூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய இந்த பூஜையில், மலையடிவாரத்தில் இருந்து திருமலை வரையுள்ள 496 படிகளுக்கும் தேங்காய், பழம் வைத்து, ஒவ்வொருபடிக்கும் மந்திரங்கள் பாராயணம் செய்து, பூஜை செய்யப்பட்டது.
இந்த பூஜையில் சிவன்மலை, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.