தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அருகே, தாயம்பாளையத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசிய போது, திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 29 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 38,463 நபர்கள் பயன் பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.ஜெயந்தி, குண்டடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சந்திரசேகரன் மற்றும் மருத்துவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.