ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளருக்கு பணி நிறைவு விழா;-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் பாலகிருஷ்னனுக்கு
பணி நிறைவு விழா நடைப் பெற்றது

ஆலங்குளம் அருகே சிவலார்குளம் கிராமத்தை சார்ந்தவர் சு.பாலகிருஷ்ணன் இவர் 25 – 05 -1987 ம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்
இரவு காவலராக பணியமர்த்தப்பட்டார்

அதனையொடுத்து இவர் அதே துறையில் தொடர்ச்சியாக இளநிலை உதவியாளராக பணி செய்து வந்த இவர் தற்ப்போது ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக
பணி செய்து வருகிறார்.

இவர் கடையம், கீழப்பாவூர், ஆலங்குளம், பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி வந்த நிலையில் பணி மூப்பின் காரணமாக இவருக்கு பணி நிறைவு பெற்றது

அதன் பணி நிறைவு விழா ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில்
வெகு விமர்சியாக நடைப்பெற்றது.

இந்த விழாவில் ஆலங்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், மாரியப்பன்,
ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சூல்தான் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்

புலவர் சிவஞானம் . சத்துணவு அமைப்பாளார், பொன்னுத்துரை ,ஊராட்சி செயலளர் வைத்தியலிங்கம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணவேணி, மற்றும் உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற பாலகிருஷ்ணனுக்கு மாலை அணிவித்து பொன்னாடை அணிவித்து
வாழ்த்தி பேசினார்கள்

அதனையெடுத்து பணி நிறைவு பெற்ற பாலகிருஷ்ணனுக்கு ஆலங்குளம் ஒன்றிய அலுவலக அலுவலர்கள் சார்பில் ரூ 10 , ஆயிரம் ரூபாய்கான காசோலையினை வழங்கினார்கள்

இந்த நிகழ்வில் ஒன்றிய அலுவலக பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், ஊராட்சி செயலர்கள் உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *