ஜே.சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் 2024 – 2025 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தம்பிக்கோட்டை பனானா லீப் ஓட்டலில் நடைபெற்றது.
இதில் இந்தாண்டின் தலைவராக அம்பேலா பேட்டரி உரிமையாளர் சாகுல் ஹமீது செயலாளராக பத்மநாபன் பொருளாளராக சீமான் என்கிற முகமது நெய்னார் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்
முன்னதாக தொடங்கிய நிகழ்ச்சிக்கு சாசன தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார் இதில் சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன் கலந்துக்கொண்டு பேசினார் புதியஉறுப்பினர்களை மண்டலம் ஏழு துணை ஆளுநர் சிவக்குமார் இணைத்து வைத்து பேசினார்
விழாவில் தில்லைவிளாகம் நூலகத்திற்கு ரூபாய் 10ஆயிரம் மதிப்புள்ள நாற்காலிகள் வழங்கப்பட்டதுடன் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை டிஎஸ்பி ராஜா முன்னாள் தலைவர்கள் மெட்ரோ மாலிக், ஜாம்பை கல்யாணம் குமரேசன் ரெங்கசாமி ராமமூர்த்தி சக்திவேல், பிரசாத், வேதசங்கர் கணேஷ் மாணிக்கம் கண்ணதாசன் சிதம்பரசபாபதி டாக்டர் சையது அபுதாகிர், சமூக ஆர்வலர் முகமது மாலிக் கனவு ஆசிரியர் செல்வசிதமபரம் கலாம் கனவு இயக்க நிர்வாகிகள் கிஷோர் ஹாஜா, பாலாஜி விவேக் சப்வான், மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.