திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்
நாகப்பட்டினம் மாவட்டம் பட்டமங்கலத்தில் 200 பனைமரங்கள் வெட்டி அழிப்பு, பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்*
நாகப்பட்டினம் மாவட்டம் , கீழ்வேளூர் வட்டம் பட்டமங்கலம் அருகே வெண்ணாறு வடிநிலை கோட்டத்துக்கு உட்பட்ட ஓடம் போக்கி ஆற்றிலிருந்து பிரியும் கிளை ஆறான நண்டுகன்னி வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த நான்கு வருட காலமாக விவசாயிகள் வாய்க்கால் தூர்வார வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் குறுவை சாகுபடிக்கான தண்ணீர் வராத காரணத்தினால் வாய்க்காலை தூர்வாரும் பணி நடைபெற்று வந்த நிலையில் வாய்க்கால் ஓரத்தில் இருந்த மாநில மரமான சுமார் 200 பனை மரங்களை எந்தவித அனுமதியும் இன்றி வேரோடு பிடுங்கி வெட்டி வீழ்த்தியுள்ளனர்.
இந்த நிகழ்வு சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளுக்கிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.