தமிழர்களின் பண்பாட்டு சான்றாக பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்கோலை அவமதித்த இண்டி கூட்டணி கட்சியை சேர்ந்த சமாஜ்வாதி எம்பி சவுத்ரியை பாஜக முதல்வர் கண்டித்துள்ளார். ஆனால் தமிழக எம்பிக்கள் நம்மை இழிவுபடுத்தியவர்களுக்கு ஆதரவாய் துதி பாடுகின்றனர் இதை வன்மையாக கண்டிக்கிறேன் என மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் தெரிவித்தார்.
தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டிய மன்னர்கள் உள்ளிட்ட தமிழ் மன்னர்கள் செங்கோல் ஏந்தி நல்லாட்சியும் நல் நீதியும் வழங்கி வந்தனர். அதனைப் பிரதிபலிக்கும் வகையிலேயே நமது பாரதம் சுதந்திரம் அடைந்த பொழுது ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அவர்கள் செங்கோலை கொடுத்து பாரத தேசம் சுதந்திரம் அடைந்து விட்டது என்ற பிரகடப்படுத்தினார்.
இவ்வாறு தமிழர்களின் மற்றும் தமிழகத்தின் பண்பாடு இணைந்த செங்கோலை நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் பண்பாட்டை பெருமைப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் வைத்துள்ளார்.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழ் விரோத சமாஜ்வாடி கட்சி எம்பி ஆர் கே சவுத்ரி அதனை அகற்ற வேண்டும் என வலியுறுத்துகிறார் அதனையே ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்பி மனோஜ் ஜா அவர்களும் வலியுறுத்தியுள்ளார். இவர்களின் கருத்தை தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி மாணிக் தாக்கூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இவர்களின் தமிழ் விரோத போக்கை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தமிழ் பண்பாட்டை வெளிப்படுத்தும் செங்கோலை அவமதித்து தமிழையும் தமிழகத்தையும் அவமதிக்க கூடாது என கண்டன பதிவு செய்துள்ளார்.
ஆனால் தமிழ்ஷ பண்பாட்டுக் காவலர்கள் எனக் கூறிக் கொள்ளும் திராவிட மாடல் திமுகவின் மற்றும் அதன் கூட்டணி எம்.பி.க்கள் 39 பேர் சென்று இந்த தமிழ் விரோத செயலை கண்டிக்காமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியது மிகவும் கண்டிக்க கூடிய செயலாகும்.
தமிழகத்தின் பெருமைகள் மற்றும் சிறப்புகளை அவமரியாதை செய்த எம்பிக்களை கண்டிக்காமல் இருக்கும் தமிழக எம்பிக்கள் மௌனம் காத்து வருகின்றனர் எனக் கூறினார்.