தென்காசி மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் பட்டதாரி இளைஞர்கள் வேளாண் துறை சார்ந்த தொழில் தொடங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்.
வேளாண் தொழில் வேளாண் நிதி நிலை அறிக்கையில் வேளாண் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை ஊக்குவித்து வேளாண் தொழில் முனைவோராக்கும் விதமாக இளைஞர்களுக்கு வேளாண் துறை சார்ந்த தொழில் தொடங்க ரூ.1 இலட்சம் மானியம் வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயனாளி தனது மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்.
வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் நிறுவ வேண்டும். அனுமதிக்கக்கூடிய திட்டங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://agriinfra.dac.gov.in முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம்.
https://pmfme.mofpl.gov.in விண்ணப்பிக்கும் முறை வங்கி கடன் உதவியுடன் கூடிய வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் மானிய தொகை போக மீதமுள்ள தொகைக்கு வங்கிக்கடன் உதவி பெற்றதற்கான சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பட்டாதாரிகள் AGRISNET www.tnagrisnet.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், தொழில் தொடங்க ஆர்வம் உள்ள பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்த கூடுதல் விவரங்களை அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ச. கனகம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.