ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மின் வட்ட கிளை மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலக முகப்பு வாயிலில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சி ஓ டி இ ஈ திட்ட தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்ட செயலாளர் முருகையன் மாவட்டத் தலைவர் எம் கே என் ஹனிபா திட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் வேலைப்பளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிட்டுள்ள ஆர்கி டெவலப்மென்ட் டிஸ்கனெக்டட் உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும் மின்வாரியத்தை பல கூறுகளாக பிரித்து தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பயன்களை வழங்கிட காலதாமதம் செய்யக்கூடாது அரசு ஊழியர்கள் பெறுகின்ற குடும்ப நல நிதி 5 லட்சத்தை மின்வாரியத்திலும் அமல்படுத்த வேண்டும் மின் விபத்தில் உயிரிழக்கும் மின்வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு நிதி பத்து லட்சம் அறிவித்ததற்கான அரசாணை வாரிய உத்தரவு வெளியிட வேண்டும் ஒன்னும் பன்னெண்டு 2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைக்க வேண்டும் கேங்மேன் தொழிலாளர்களுக்கு ஊர் மாற்றம் கள உதவியாளர் பணி மாற்றம் அளித்திட வேண்டும் உள்முக தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்ட குரும தேதி கைவிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்ட நிகழ்வில் சி ஐ டி யு மாநில குழு பிரேமா துணைச் செயலாளர் ஜோதிபாசு திட்ட துணைத் தலைவர் மோகனசுந்தரம் துணைச் செயலாளர்கள் ஜெயச்சந்திரன் முரளிதரன் திருவாரூர் கோட்டத் தலைவர திருவாரூர் குமார் கோட்டச் செயலாளர்கள் மன்னார்குடி வீரபாண்டியன் திருவாரூர் வினோத் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு விஜயா திட்ட மற்றும் கோட்ட நிர்வாகிகள் துரைராஜ் சுரேஷ் சுஜாதா விஜயசாந்தி சார்லஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர் நிறைவாக திட்டப் பொருளாளர் முகேஷ் நன்றி கூறினார்