பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கூட்டுறவு நகர வங்கியின் 110- வது பேரவைக் கூட்டம் நடைபெற்றது.தேசிய நல்லாசிரியர் கலைச்செல்வன் தலைமை வகித்தார் .
ஓய்வு பெற்ற பொது மேலாளர்(பொறுப்பு)தியாகராஜன் வரவேற்று பேசினார்வங்கி மேலாண் இயக்குநர் சரவணன் நிர்வாக அறிக்கை வாசித்தார் வங்கி பொது மேலாளர் (பொறுப்பு) ஆனந்தி தீர்மானங்கள் வாசித்து ஒப்புதல் பெற்றனர்.
கூட்டத்தில் ஓய்வு பெற்ற பொது மேலாளர் கரிகாலன், ஓய்வு பெற்ற மாவட்ட கருவூல அதிகாரி அன்பழகன், ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜசேகர்,ஓய்வுப்பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர் திருமேனி , வங்கி உதவியாளர் உஷா ,ஆகியோர் கலந்து கொண்டு வங்கி வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.
கூட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்கள், வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் வங்கி உதவி மேலாளர் பிரவீன் குமார் நன்றி கூறினார்.