ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்காவில் வருடாந்திர மௌலூது ஷரீப் நிகழ்ச்சி நாளை 30ந்தேதி நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்கா உள்ளது. ஆயிரம் ஆண்டை கடந்த பழமையான இந்த தர்காவிற்கு ஆண்டு முழுவதும் தினந்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் இருபது வழக்கம்.
இந்தநிலையில் தற்போது கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது, இதில் வருடந்தோறும் நடைபெறும் கந்தூரி விழாவிற்கு அடுத்தபடியாக வருடந்தோறும் உலக அமைதி வேண்டி நடைபெறும் சுமார் 50ஆண்டு பராம்பரிய வருடாந்திர மௌலூது ஷரீப் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொள்வார்கள், இந்தநிலையில் இந்த வருடத்தின் உலக அமைதி வேண்டி வருடாந்திர மௌலூது ஷரீப் நிகழ்ச்சி வரும் நாளை 30ந்தேதி மாலை மணிக்கு நடைபெறுகிறது.
இதற்கு தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹீப் தலைமை வகிக்கிறார். தர்கா டிரஸ்டிகள் முன்னிலையில் இதில் ஏராளமானவர்கள் ஒன்றாக அமர்ந்து குரான் ஓதி தமாம் செய்யப்பட்டு மௌலூது ஷரீப் ஓதப்படுகிறது.
மேலும் உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனையும் செய்யப்பட்டு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தப்ரூக் பிரசாதம் வழங்கப்படுகிறது இதில் எராளமான இஸ்லாமியர்கள் உட்பட பல்வேறு மதத்தினரும் கலந்துக்கொள்கின்றனர்,
இந்த மௌலூது ஷரீப் நிகழ்ச்சியை முன்னிட்டு இப்போதே பக்தர்கள் கூட்டம் வந்தவண்ணம் உள்ளது. இதில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர் இந்த மதநல்லிணக்க பராம்பரிய உலக அமைதி வேண்டி நடைபெறும் இந்த மௌலூது ஷரீப் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்து தர வேண்டுகிறேன் என தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹீப் தெரிவித்தார்.