செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
கற்க கசடற அமைப்பு சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கற்க கசடற சமூக அமைப்பு , ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளி மற்றும் வழூர் வட்டார சுகாதார நிலையம் இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
வந்தவாசி வட்டாட்சியர் ஆர்.பொன்னுசாமி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கற்க கசடற அமைப்பு நிர்வாகி டாக்டர் இரா. பாஸ்கரன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்தன், நகர் மன்ற துணைத் தலைவர் அன்னை க. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் வி.எல். ராஜன் வரவேற்றார். எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், ஆசியன் அகாடமி பீ. ரகமத்துல்லா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், துணை வட்டாட்சியர் ஆனந்த குமார், டாக்டர் மதன் குமார், எக்ஸ்னோரா கிளை நிர்வாகி மு.பிரபாகரன், நகர் மன்ற உறுப்பினர் சந்தோஷ், வந்தவாசி விஏஓ மணிவண்ணன், ஜெஆர்சி ஆசிரியர் செல்வராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று கருத்துக்களை வழங்கினர்.
முன்னதாக பேபி சஹானா, அனிருத், கார்த்திகேயன் ஆகியோரின் விழிப்புணர்வு மைம் ஷோ நடைபெற்றது. சமூக ஆர்வலர் யூனிஸ்கான் நன்றி கூறினார்