தேனியில் மின் ஊழியர் மத்திய அமைப்பு தேனி கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரான தேனியில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்
தேனி மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின் பொறியாளர் அலுவலகம் முன்பு தேனி கிளை செயலாளர் ஏ. தேவராஜ் தலைமை வகிக்க சி ஐ டி யு மாநிலத் துணைத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் சி ஐ டி யு தேனி மாவட்ட செயலாளர் எம் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து 11 அம்ச கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் விளக்கிப் பேசினார்.
இவர்கள் பேசும்போது மின் பொறியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் அரசாணை 100 ஜ முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளை கலைந்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் மின்சார வாரியத்தை பல கூறுகளாக பிரித்து தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை கால தாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும் கேங்மேன் ஊர் மாற்றம் கட உதவியாளர் பணி மாற்றம் பெற்றிடவும் தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்ட குரும தேதியை கைவிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் சி ஐ டி யு
மாநில செயற்குழு உறுப்பினர் எம். வளர்மதி பெரியகுளம் கோட்ட பொறியாளர் முத்துக்குமார் தேனி கிளை மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் க. முத்துக்குமார் பி. தங்கவேல் பி. பெரிய முத்து ஜி. பாலாஜி மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் மாநில செயற்குழு உறுப்பினர் வளர்மதி நன்றி உரையாற்றினார்.