மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு, காட்டுநாயக் கன் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த மக்கள் மற் றும் மாணவ, மாணவிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவ, மாணவிகள் தங்களது முகத்தில் கருப்பு நிற மையை பூசியபடி ஆடிப்பாடி தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
மேலும் தங்க ளின் பிள்ளைகளுக்கு உடனடியாக சாதி சான் றிதழ் வழங்க வேண்டும் என பெற்றோர் கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “மதுரை அந்தனேரி எஸ்.ஆலங் குளம் மகாகணபதிபுரம் பகுதியில் ஏராளமான காட்டுநாயக்கன் பழங்குடி சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 47 ஆண்டுகளாக வெவ்வேறு காலக்கட்டங்களில் பதவி வகித்த வருவாய்த்துறை அதிகாரிகள், தங்களுக்கு சாதிச்சான்றிதழை வழங்கி வந்தனர்.
தற்போ துள்ள வருவாய்த்துறை அதிகாரிகள், அரசு வெளியிட்ட அரசாணையை பின்பற்றாமல் தன்னிச்சை யாக செயல்பட்டு குழந்தைகளுக்கு சாதிச்சான் றிதழ் வழங்காமல் இருக்கின்றனர்.
பழங்குடி மக்க ளாகிய எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, எங்கள் குழந்தைகள் கல்வி பயில்வதை கேள்விக் குறியாக்கி வருவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம். பள்ளி குழந்தைகளுக்கு நிலுவையில் உள்ள சாதிச்சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும்” என்றனர்.