தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தினம். தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் மாதம் முழுவதும் சுற்றுச்சூழல் தினமாக கொண்டாட வேண்டும் என பள்ளி மேனேஜிங் டைரக்டர் கே ஆர் சௌந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார்
இதன்படி நிறைவு விழா சனிக்கிழமை உலக சுற்றுச்சூழல் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட கல்வி அலுவலர் ஷமர்தா ஐ எஃப் எஸ் கலந்துகொண்டு பேசும்போது மாணவர்களுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து விழிப்புணர்வு மற்றும் இயற்கை வளம் காப்பது குறித்த கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்,
பின்பு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில்அளித்தார். சுற்றுப்புற சூழல் குறித்த போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டினார்.
சிறு வயது பிள்ளைகளிடம் மரங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், இனிவரும் தலை முறைகள் மரங்களை நடுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல், பாதுகாப்பு பற்றியும் சிறு வயதிலேயே அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு பள்ளி இருபால் ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, சிறு குழந்தைகளை பள்ளி வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைப்பதற்கான மரக்கன்றுகளை நடவைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கம் தரப்பட்டது.
மேலும் இதில் மாணவர்களுக்கென பள்ளி நிர்வாகம் தோட்டம் அமைத்து கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இந்த மூலிகை தோட்டத்தில் மாணவர்கள் இயற்கை குணமுள்ளகீரைவகைகள்(அரைகீரை,பொன்னாங்கண்ணி,சிறுகீரை,வல்லாரை, கரிசலாங்கண்ணி) போன்றவற்றை நட்டு அதற்கு தேவையான இயற்கை உரங்களை பள்ளி மாணவர்களே தயார்செய்து பயன்படுத்துகின்றனர்,
இந்த தோட்டத்திற்கு நம்மாழ்வார் தோட்டம் என பெயர் சூட்டப்பட்டது. இந்திய மாநிலங்களில் விளைவிக்கக்கூடிய தானியங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றினை, விளக்கப்படத்தின் மூலமாக மாணவர்கள் காட்சிப்படுத்தினர். பள்ளியில் சிறியதாக வனம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதனை மாணவர்களுக்காக திறந்துவைத்து அதற்கு பிரவசி BRAVISHI என்று பெயர் சூட்டப்பட்டு வனத்தினை விரிவுபடுத்துவது குறித்த அறிவுரைகள் மற்றும் நன்மைகள் பற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளக்கப்பட்டு உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வாக இந்த விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் கே. ஆர். எஸ்.ராம் ஜெயந்த் ஐ டி ஏ எஸ் ஜாயிண்ட் கமிஷனர் பள்ளி மேனேஜிங் டைரக்டர் கே .ஆர். சௌந்தரராஜன். தாளாளர் கவிதா சௌந்தர்ராஜன் தலைமை வகித்து பள்ளி முதுநிலை முதல்வர் R.சுவத்திகா. இளநிலை முதல்வர் எஸ் கயல்விழி ஆகியோர் முன்னிலையில் இந்த விழா வெகு சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது பள்ளி மேனேஜிங் டைரக்டர் கே ஆர் சௌந்தர்ராஜன் விழாவில் பங்கேற்ற அனைவரையும் கனிவுடன் வரவேற்று உபசரித்து நன்றி உரையாற்றினார்