பொள்ளாச்சி –
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் தலைவர் ஜி. டி. கோபாலகிருஷ்ணன் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்
அதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அதிமுக பொது பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொள்ளாச்சியில் உள்ள மறைந்த ஜி.டி. கோபாலகிருஷ்ணன் இல்லத்தில் அவருடைய திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.
இவருடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன். பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன். மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் சே. தாமோதரன் பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார்மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மறைந்த ஜி. டி. கோபாலகிருஷ்ணன் அவர்கள் பொள்ளாச்சி தொழில்வரத்த தலைவராக 16 வருடங்களாக பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கோபி சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் அவர்களின் மகன் வழி சம்மந்தியும் ஆவார்.