மதுரையில் 3 நாட்கள் மாநகராட்சியின் பழைய 72 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் தற்போது 100 வார்டுகள் உள்ளன. இதற்கு முன்பாக 72 வார்டுகள் இருந்தன. இந்நிலையில் வைகை அணை யில் பொதுப்ப ணித்துறை மூலம் தற்காலிகமாக காப்பணை அமைக்கப்பட்டிருந்தது.
மதுரை மாநகராட்சிக்கு வைகை குடிநீர் வடகரை மற்றும் தென்கரை மூலம் விநியோகிக்கப்பட்டு வரு கிறது. தற்போது வைகை அணையில் பிக்கப் ஷட் டர் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட தடுப்பணையை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
இதன் எதிரொலியாக நாளை ஜூலை 1 பிற்பகல் முதல் ஜூலை 3ம் தேதி பிற்பகல் வரை வைகை தென்கரை மற் றும் வடகரை பகுதிகளான பழைய மாநகராட்சியின் 72 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மேலும் அத்தியாவசியமான வார்டு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு மாநகராட்சி அறிவித்துள்ளது.