ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியின் சாரணர் இயக்க சாதனை மாணவர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளின் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
மாவட்ட சாரணர்இயக்க சாதனையாளர்களை பாராட்டும் இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தலைமைதாங்கி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி முன்னிலை வகித்தார்.முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆரோக்கியதாஸ் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பாராட்டு சான்றிதழ் பெற்ற செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற
பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டு பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *