மதுரையில் நவம்பர் 2 ம் தேதியை சகல ஆத்துமாக்களின் திருநாள் எனும் கல்லறை திருநாளை, இறந்தோரை என்றும் மறந்தார் இல்லை என்பதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகிறார்கள்.
இன்றைய நாளிலே தங்கள் குடும்பங்களில் இறந்து போன தங்களது மூதாதையர்கள், பெற்றோர், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
முன்னதாக மரித்தவர்களின் கல்லறைகளுக்கு சென்று அவற்றை சுத்தம் செய்து வர்ணங்கள் பூசி அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து,மேலும் அவர்களின் நினைவாக ஏழைகளுக்கு ஆடைகள்மற்றும் உணவு வழங்குவது போன்ற வகையில் இந்த நாளில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்..
மதுரையில் மிகப்பழைமையான மஹபூப்பாளையம் கல்லறை, துவரிமான், நரிமேடு உள்ளிட்ட கல்லறைகளில் நேற்று முதலே கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பங்களில் மரித்தவர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து கல்லறை திருநாளை அனுசரித்து
வருகிறார்கள்.
கல்லறை திருநாளில் மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து, மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் மரித்தவர்களின் ஆன்ம இளைப்பாறு வதற்காக சிறப்பு திருப்பலி நிறைவேற்றி தொடர்ந்து அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பேராயர்கள், அருட்தந்தையர்கள் கல்லறைகளை புனித நீர் தெளித்து கல்லறைகளை மந்திரிக்கிறார் கொண்டிருக்கிறார் அதேபோன்று மகபூப்பாளையம், தத்தநேரி, துவரிமான், நரிமேடு மற்றும் பல பகுதிகளில் உள்ள கல்லறைகளில் இறந்தவர் களுக்கான சிறப்பு திருப்பலி நிறை வேற்றப்பட்டு அருட்தந்தையர்கள் புனித நீர் தெளித்து அந்த கல்லறைகளை மந்திரித்தனர். இவ்வாறாக கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளை கடைபிடித்து வருகின்றனர்.