தி ரைஸ் – சங்கம் 5 மாநாட்டுக் குழுவின் ஒற்றுமைப் பொங்கல் கொண்டாட்டம் நடந்தது.
55 நாடுகளைச் சேர்ந்த தமிழ்த் தொழிலதிபர்கள் பங்கேற்று ஆடிப் பாடி மகிழ்ந்தனர் 250க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது
மதுரை அருகே கீழடியில் உலகத் தமிழர் ஒற்றுமைப் பொங்கல் கொண்டாட்டத்துடன் தி ரைஸ் சங்கம் 5 உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு நிறைவு பெற்றது.
தி ரைஸ் அமைப்பு சார்பில் “சங்கம் 5” என்ற பெயரில் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு ஜனவரி 8 அன்று கோலகலமாக துவங்கியது.
கடந்த 3 நாட்களாக மதுரையில் நடைபெற்று வரும் தி ரைஸ் – சங்கம் 5 மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 55 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் அதிகமான தமிழ் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். தொழில் முனைவோர் பயனடையும் வகையில் பல்வேறு தலைப்புகளில் பிரத்யேக அமர்வுகள் நடைபெற்றன. சாதனையாளர்
களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாநாட்டின் இறுதி நாளன்று கீழடியில் உலகத் தமிழர் ஒற்றுமை பொங்கல் சிறப்பாக கொண்டாடப் பட்டது. கீழடி வரலாற்றில் முதல் முறையாக நடைபெறவுள்ள இந்த பாரம்பரிய விழாவில் 250க்கும் மேற்பட்ட பொங்கல் பானைகளில் 55 நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பாலபிரஜாபதி அடிகளார், திருவடிக்குடில் சுவாமிகள், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாசபை தலைவர் பி.ஏ.காஜா முயினுத்தீன் பாகவி, மதுரைப் பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து, சிவகங்கை ஆயர் லூர்து ஆனந்தம், தென்னிந்திய திருச்சபை மதுரை – ராமநாதபுரம் மண்டல பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொங்கல் கொண்டாட்டத்தின்போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களை உலகத் தமிழ் தொழில் முனைவோர்கள் விளையாடி மகிழ்ந்தனர். பல்வேறுவிதமான போட்டிகள் சுவாரசியமாக நடத்தப்பட்டன. கீழடி ஒற்றுமைப் பொங்கல் கொண்டாட்டத்துடன் தி ரைஸ் சங்கம் 5 உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு நிறைவு பெற்றது.