பாபநாசம் அருகே பண்டாரவாடையில் விவசாயிகள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா…

தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை ஊராட்சியில் பார்வதிபுரம் கிராமத்தில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

மாநில தலைவர் முகம்மது இப்ராஹிம் தலைமை வகித்தார்.

விழாவில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் பாபநாசம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் முருகவேலு, தஞ்சாவூர் தோட்டக்கலை துணைத் தலைவர் வெங்கட்ராமன், மாவட்ட தலைவர் ஜெயக்குமார், இயற்கை விவசாயி உதய்குமார், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், பழனியப்பன், ரவிச்சந்திரன், செந்தில்குமார், அருணாச்சலம், பாபநாசம் ஒன்றிய பொருளாளர் ரவிச்சந்திரன்,திமுக நிர்வாகிகள் ராயல்அலி ,தமிழ்வாணன்,
அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
முடிவில் வாழை விவசாயி சங்கர் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *