செய்தியாளர் பார்த்தசாரதி

புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நவமால்காப்பேர் மும்மொழி நாயக்கன் குப்பம் ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை 10.2.2026 இன்று மாலை 5 மணி யளவில் ஶ்ரீ ஆண்டாள் ஶ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம் அபிஷேகம் நடைபெற்றது பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து 11.1.2026 அன்று காலை 10.30 மணிக்கு மும்மொழி நாயக்கன்குப்பம் ஶ்ரீ ஏழை முத்து மாரியம்மன் ஆலயத்தில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு நாதஸ்வரம் மற்றும் மேலத்தாலத்துடன் தட்டு வரிசைகளை பெண்கள் கொண்டு வந்தனர்

இதனைத் தொடர்ந்து 12 மணிக்குள் மீன லக்னத்தில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம் மந்திரங்கள் முழங்க எம்பெருமான் ஆண்டாளுக்கு திருமாங்கல்யம் சூட்டினார் எம்பெருமான் ஆண்டாள் கல்யாண கோலத்துடன் காட்சியளித்தனர் இதனைக் கண்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டனர் திருமண விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து வடை பாயாசம் அப்பளம் பொரியல் அறுசுவை உணவுடன் அன்னதானம் நடைபெற்றது திருமண விழா இனிதே நிறைவடைந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *