கரூர் செய்தியாளர் மரியான் பாபு


திருப்பூர் குமரனின் 94வது நினைவஞ்சலி..

கரூர் மாவட்டம் கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில் விடுதலைப் போராட்ட வீரர் கொடிகாத்த திருப்பூர் குமரனின் 94வது நினைவஞ்சலி முன்னிட்டு மலர் தூவி மரியாதைசெலுத்தினர்.

கரூர் மாநகர செயலாளர் கனகராஜ் தலைமையில் மேற்கு மண்டலபொறுப்பாளர்,முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளரும்,கரூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில் பாலாஜி கொடிகாத்த விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


மாநில செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில்,மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ் பாபு,மாநகராட்சி மேயர் கவிதா துணை மேயர் சரவணன் மண்டல குழு தலைவர்கள் கோல்ட் ஸ்பாட் ராஜா, சக்திவேல், மாமன்ற உறுப்பினர் பாண்டியன் மற்றும் நெசவாளர் அணி பொறுப்பாளர்கள், மாவட்ட நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *