தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்
ஏ.கே கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி.
பே.மதிவதனா முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் அரசு பள்ளயில் 6.முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் மாதம் ரூ.1000 உதவிதொகை பெறும் வகையில் “தமிழ்ப்புதல்வன்” திட்டம் ஆகஸ்ட்-2024 மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது பற்றியும் இத்திட்டத்தில் மாணவர்கள் கல்லூரி வாயிலாக யு எம் ஐ எஸ் வலைதளம் மூலம் எவ்வாறு பதிவு மேற்கொள்வது என்பது பற்றியும் மேலும் புதுமைப் பெண் திட்டத்தில் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் பயன்பெறுவதை அனைத்து கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனவும்
புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழப்புதழ்வன் திட்டம் அனைத்து மாணவ மாணவி களுக்கு தெரிந்திடும் வகையில் பல்வேறு விதமான விழிப்பு ணர்வு நடவடிக்கைள் கல்லூரி, பள்ளி கல்வித்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் மேற்கொளள அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மண்டல இணை இயக்குநர்-உயர்கல்வித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.