தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப் போராட்டம் ஆலங்குளம் நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ் தலைமை தாங்கினார்.

ஆலங்குளம் வட்டார தலைவர், ரூபன் தேவதாஸ், இலக்கிய அணி மாநில துணை தலைவர், ஆலடி சங்கரையா மாவட்ட துணை தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்,

ஆர்பாட்டத்திற்கு முன்பாக ஆலங்குளம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிள் அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்,.

பின்னர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகையை அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யை கண்டித்து கண்டன கோசம் எழுப்பபட்டது

பின்னர் அண்ணாமலை உருவப்படம் எரிக்கப்பட்டு
சாலை மறியல் போராட்டம் ஈடுப்பட தொடங்கினர் அங்கிருந்த காவல் துணை கண்காணிப்பாளர் பர்ணபாஸ் ,காவல் ஆய்வாளர் மாதவன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் தங்க வைத்து பின்பு மாலை 5 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்

இந்த ஆர்பாட்டத்தில் இலக்கிய அணி தொகுதி தலைவர் லிவிங்ஸ்டன் விமல், வழக்கறிஞர் கருப்பசித்தன்,மாவட்ட தலைவர் அலெக்ஸ், லெனின்,ஆலங்குளம் நகரச் செயலாளர் ஏசுராஜன்
மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர்
சுப்பிரமணியன்,கீழப்பாவூர் நகரத் தலைவர் சிங்ககுட்டி,கீழப்பாவூர் கிழக்கு வட்டார தலைவர்
மகாராஜா,பாப்பாக்குடி வட்டார தலைவர் தினகரன்,
முன்னாள் துணை சேர்மன், டிஆர் எஸ்
கோயில்பிள்ளை தெற்கு அழகுதுரை, வடக்கு முருகன், ஆழ்வார்குறிச்சி நகரத் தலைவர் முருகன்,
ஆலங்குளம் முன்னாள் கவுன்சிலர் எம் எஸ் அருணாசலம், , ஐசக், பொன்னுதுரை,
லெனின்,அமைப்பு சாரா தொழிற்சங்கம் மல்லீஸ்வரன்,,தங்கராஜ்,ராஜகோபால் , வேல்முருகன், செல்வராஜ்,குருவன்கோட்டை கிராம கமிட்டி தலைவர் மாரியப்பன்
உள்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *