அலங்காநல்லூர்.ஜன.12
மதுரை அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் 48வது திண்ணை பிரச்சாரம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமையிலும் நகர செயலாளர் அழகுராஜ், முன்னிலையிலும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி 2026சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சோழவந்தான் தொகுதியில் கழகத்தின் சார்பில் அறிவிக்கும் வேட்பாளருக்கு மகத்தான வெற்றியை தேடி தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து முனியாண்டிகோவில் அருகில் இருந்து ஐயப்பன்கோவில் வரை நடைபயணமாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது .
இதில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வாடிப்பட்டி ராஜேஷ்கண்ணா,
வக்கீல் திருப்பதி,முன்னாள்சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன்,மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன்,
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன் மணியன்,மாவட்ட விவசாய அணி
ஆர்.பி.குமார்,அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர்சுந்தர்ராஜன்,வார்டு பொருளாளர் சுந்தரராகவன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், பெருமாள், ஒன்றிய முன்னாள் துணை சேர்மன் குணசேகரபாண்டியன்,மகளிரணி மாவட்ட செயலாளர் லெட்சுமி,பேரூராட்சி வார்டு செயலாளர்கள் பாஸ்கரன்,
வெள்ளைகிருஷ்ணன்,பாண்டி, இணைச் செயலாளர் புலியம்மாள்,அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன்,கிளைச் செயலாளர்கள் பாண்டுரங்கன்,
சுந்தர்ராஜன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.