துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் 09/01/2026 அன்று தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில்
2026ஆம் ஆண்டு ஜனவரி 01ந் தேதி முதல் 31ந் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து 09/01/2026 அன்று காலை 10 மணியளவில் துறையூரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் மாபெரும் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

துறையூர் பாலக்கரையில் வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர் சுரேஷ் பாபு தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.இதில் துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குண்டுமணி, திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் நடராஜன், துறையூர் போக்குவரத்துதுறை உதவி காவல் ஆய்வாளர் அப்துல்லா சாகிப், நெடுஞ்சாலைத்துறை ரோந்து உதவி காவல் ஆய்வாளர் தங்கம், குற்றப்பிரிவு காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜதுரை, வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாலக்கரையில் தொடங்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி திருச்சி ரோடு ,பேருந்து நிலையம், முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா வரை சென்று நிறைவு பெற்றது.இதில் இருசக்கர வாகன ஓட்டிகள், காவல்துறையினர்,தீ தடுப்பு துறையினர், பள்ளி வாகனங்கள், லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர் சங்கத்தினர்,ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், டாக்சி உரிமையாளர்கள்,ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சுற்றுலா வேன் ஓட்டுனர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள்,ஜேசிஐ நிர்வாகிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து கலந்து கொண்டன.

இந்த பேரணியில் சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பது, பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வாகனத்தின் இயக்கத்தை நிறுத்தி பாதசாரிகளுக்கு வழி விட வேண்டும், வாகன விபத்துகளின் போது உயிரிழப்பை தடுக்க சீட் பெல்ட் அணிய வேண்டும், விபத்துகளை தடுத்து விடும் வகையில் சாலை குறியீடுகளையும் விதிகளையும் மதிக்க வேண்டும், வேகவரம்பினை மதிக்க வேண்டும்,

வாகனங்களை சரியாக பராமரிப்புடன் வைத்திருக்க வேண்டும், வாகனத்தை ஓட்டும் போது கைபேசியை பயன்படுத்தக் கூடாது, இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும், அபாயகரமாக வாகனத்தை இயக்கக் கூடாது, விட்டுக் கொடுக் கும் தன்மை வேண்டும், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது என்பது போன்ற போக்குவரத்து விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டது.வாகனங்களில் இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம், வாகன உரிமம் அவசியம் வைத்திருக்க வேண்டும், தவறும் பட்சத்தில் அபராதம் கட்ட நேரிடும் என்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் குண்டுமணி கூறினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் தீ தடுப்பு படை வீரர்கள் தீ தடுப்பு வழிமுறைகளை நடத்திக்காட்டினர். இப்பேரணயில் போக்குவரத்து காவலர்கள் விக்னேஷ், ஸ்ரீதர், காஞ்சனா ,முனீஸ்வரன், அம்பிகா,கலைவாணி மற்றும் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் வடிவேல்,லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பாஸ்கர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சங்கம் தர்ஷினி திருமூர்த்தி,ஓட்டுநர் பள்ளி பிரபு, ராஜா,ஆட்டோ மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *